10ம் வகுப்பிற்க்கு மேல் படிக்கும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர்,கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்....
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய இணைய தளம் 13.12.2021 அன்று திறக்கப்படவுள்ளது.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதே போல் மத்திய அரசு நிதி ஆதரவிலான ப்ரி மெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான இணையதளம் திறக்கப்படவுள்ளதால் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மாணாக்கர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு:-
https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr101221_1316.pdf
Tags: தமிழக செய்திகள்