Breaking News

Breaking: 3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

அட்மின் மீடியா
0

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார், மேலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

 


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஏற்கனவே இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது

இதையடுத்து மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.இதனையடுத்து, 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது

Give Us Your Feedback