Breaking News

பொதுமக்கள் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அட்மின் மீடியா
0

பொதுமக்கள் மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது


சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிமுறைகள்:

மழை காலத்தில் அதிகம் நோய் பரவும் என்பதால் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

உணவு உட்கொள்ளும் முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். 

வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை கழுவி விட்டு செல்ல வேண்டும்.

சாலை ஓரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

திறந்த வெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை தவிர்த்து கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு என்று மருத்துவரை அணுகவும்





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback