Breaking News

இலவச ஆடு வாங்க விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

2021-22ஆம் ஆண்டு ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் / கணவரால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சிக்கு 100 பயனாளிகள் வீதம் 1000 பயனாளிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி ....



விண்ணப்பிக்க தகுதிகள் :-

ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் 

கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்

ஆதரவற்ற பெண்கள் மட்டும் 

விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் நிலமற்ற வேளாண் தொழிலாளி ஆக இருக்க வேண்டும்.

பயனாளிகள் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும்

60 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்கவேண்டும்

சொந்தமாக கறவை பசுக்களோ, வெள்ளாடுகளோ அல்லது செம்மறி ஆடுகளோ வைத்திருக்க கூடாது. 

பயனாளி மிகவும் ஏழ்மையாகவும், அவர்கள் குடும்பத்தில் எவரும் அரசுப்பணியில் அல்லது கூட்டுறவுத்துறை மற்றும் உள்ளாட்சி பதவிகளில் இருக்கக்கூடாது. 

 

விண்ணப்பம் எங்கு கிடைக்கும்:-

விண்ணப்பங்களை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் இருந்து பெற்று, உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்து விண்னப்பிக்கவேண்டும்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

டிசம்பர் 9 மாலை 5 மணிக்குள் கால்நடை மருந்தகங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

 



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback