உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...
உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க செப்டம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வேலைக்கு செல்லும் உலமாக்கள் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்ட மானியம்:
இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ. 25,000, இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்:
தமிழக வக்ப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுணா்வுக்கான சான்றிதழ்,
குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சியின்மை பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
தமிழகத்தைச் சாா்ந்தவராகவும், 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வாகன ரகம்:
அடுத்து இந்த திட்டத்தில் வாகனம் ஒன்றை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த வாகனத்தின் இன்ஜின் 125cc (Engine Capacity) அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மேல் வாகனம் எடுப்பவர்களுக்கு வாகனத்தின் மானியம் கிடைக்காது. மேலும் 2020 ஜன.1-க்கு பிறகு தயாா் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
தேவையான ஆவணம்:
ஆதாா் அட்டை,
வாக்காளா் அடையாள அட்டை,
குடும்ப அட்டை,
வருமானச் சான்று,
வயது சான்றிதழ்,
புகைப்படம்,
ஜாதிச் சான்று,
மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று,
ஓட்டுநா் உரிமம்,
கல்வித் தகுதி சான்றிதழ்,
வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல்,
சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகளாக பணிபுகிறாா் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன்,
அடுத்து வாகனம் எடுக்கும் முன் வாகனத்திற்கான Quotation கொடுப்பார்கள். அந்த வண்டியின் Quotation-ஐ விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் பெற
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
குறிப்பு :
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் உள்ளது
உலமாக்கள் உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்த்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு:
கரூர் மாவட்டம்
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/07/2021070718.pdf
புதுக்கோட்டை மாவட்டம்
https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/07/2021070812.pdf
சென்னை மாவட்டம்
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/09/2021090667.pdf
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி