Breaking News

தமிழக அரசின் திருமண உதவித்தொகை பெற என்னென்ன தகுதிகள்? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் தாலிக்கு தங்கம் உதவித்தொகை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது

 


தமிழக அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் திருமங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்த திட்டம்

குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போர் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தால் மனு தள்ளுபடி செய்யவேண்டும்

மணமகளுக்கு 18 வய்தும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

விண்ணப்பிக்கும் மனுதாரர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. 

குடும்ப ஆண்டு வருமான சான்றினை ரூ.72,000க்குள் சமர்த்திருக்க வேண்டும். 

திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி தொகை விண்ணப்பிப்பவரின் மனு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback