Breaking News

BREAKING தமிழக பட்ஜெட் 2021-2022 முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 பட்ஜெட் உரைக்கு முன்னதாக பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. 



தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். 

பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியவுடன் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். 

பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு பேச வாய்ப்பளிக்கப்படும் என்று அவைத் தலைவர் கூறினார். எனினும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.

பட்ஜெட் 2021-2022

திருத்திய வரச்செலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய மாதங்களுக்கு பொருந்தும் 

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் - 

6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு இந்த பட்ஜெட் பொருந்தும்.

கீழடி, சிவகளையில் அகழாய்வு நடந்த இடங்கள் தொல்லியல் தலங்களாக அறிவிக்கப்படும். 

மாநிலத்தின் அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு முறை அமல்படுத்தப்படும். அனைத்து கொள்முதல்களிலும் மின்னணு கொள்முதல் முறை பின்பற்றப்படும்.

 

ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது 10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும்

அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் 

போக்குவரத்து ஆணையகரம் இனிமேல் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையகரமாக மாற்றப்படும்

தமிழகம் முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்

 

அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும்

காவல்துறையில் 14,317 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழாய்வு நடத்த ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு.

காவல்துறைக்கு ரூ8930.29 கோடி நிதி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 405.13 கோடி ஒதுக்கீடு

 

தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80.26 கோடி

அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டிடங்கள் உறுதி செய்யப்படும்-நீதித்துறைக்கு ரூ1713 கோடி ஒதுக்கீடு

குளங்களை தூர் வாருவதற்கு ரூ111 கோடி ஒதுக்கீடு

1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்

மீனவர் நலனுக்காக ரூபாய் 1149 கோடி நிதி ஒதுக்கீடு

 

நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயத்தப்படும்ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தும்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு மீண்டும் ரூ.3 கோடி நிதி வழங்கப்படும்

பள்ளிக்கல்வித்துறைக்கு 32,599 கோடி நிதி ஒதுக்கீடு 

உயர்கல்வித்துறைக்கு ரூபாய் 5,369 கோடி ஒதுக்கீடு

இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும்

 

10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடெல் பார்க் அமைக்கப்படும்

வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்வு..!

மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு

தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு..!


பெட்ரோல் மீது மாநில அரசின் வரியில் ரூ.3 குறைப்பு

குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை 

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ5 லட்சமாக உயர்வு 

உரிய விசாரணைகளுக்குப் பின் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு செயல்படுத்தப்படும் 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி 

வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு; நிதிநிலை அறிக்கையில் தகவல்..!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback