குறைந்த செலவில் ஹெலிகாப்டர் உருவாக்கியபோது விபரீதம் பரிதாபமாக போன உயிர்
மகாராஷ்டிராவில் குறைந்த செலவில் தனது சொந்த முயற்சியால் ஹெலிகாப்டரை உருவாக்க நினைத்த இளைஞர் சோதனை முயற்ச்சியில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற இளைஞர் புதிய புதிய கண்டுபிடிப்புகளில் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் முன்னா ஹெலிகாப்டர் என்ற சிங்கிள் சீட் கொண்ட ஹெலிகாப்டரை 2 ஆண்டுகளாக தன் சொந்த முயற்சியால் தயாரித்து வந்தார்.
இந்நிலையில் தன் ஹெலிகாப்டரை சோதித்தபோது திடிரென ஹெலிகாப்டர் ஆரம்பநிலையில் விபத்துக்குள்ளானதில் இறக்கை மோதி ஷேக் இஸ்மாயில் பலத்த காயமுற்றார் இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இஸ்மாயில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். ஹெலிகாப்டர் சோதனையின் போது விபத்து ஏற்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ