திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு தாசில்தாரிடம் முன் அனுமதி கட்டாயம்: கோவை ஆட்சியர் உத்தரவு
கோவையில் உள்ள திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள், இதர நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன் அனுமதிபெற வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என, அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி, இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் மூலம் விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
.கரோனா தொற்று தடுப்புப் பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்