தமிழகத்தில் இன்று முதல் அளிக்கபட்ட தளர்வுகள் முழு விவரம்.....
தமிழ்நாடு அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அனுமதி தரப்படுகிறது
இன்று முதல் தளர்வுகள்
இன்றுமுதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன. 4 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மறுபடியும் திறக்கப்படுகின்றன.50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், நீச்சல் குளங்கள் (விளையாட்டு பயிற்சிக்கு மட்டும்), தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கடற்கரைகளில் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு அனுமதி தரப்பட்டிருக்கிறது...
கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது...
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்
