BREAKING தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு! முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது நோய்த்தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது
மேலும் மாநிலத்தில் அனைவரும் குரல் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.. மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள ஒரு நாள் நோய் பரவல் தடுப்பை பல கட்டுப்பாடுகள் வருகின்ற 6ம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது
தளர்வுகள்:-
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி
செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.
1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் -
நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.
23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.
ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி: கேரளாவுக்கு அனுமதி இல்லை
தங்கும் விடுதி, கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடம் செயல்பட அனுமதி-
தகவல் தொழிநுட்பம், அதனை சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
அங்கன்வாடி மையங்கள் 1 ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்கு அனுமதிக்கப்படும்
விளையாட்டு பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் 23.08.2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்
தமிழக அரசின் அறிவிப்பு மேலும் விவரங்களுக்கு:
Tags: தமிழக செய்திகள்