தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகமானது! விலை மற்றும் சிற்பம்சம் முழு விவரம்...
தமிழகத்தின் ஒசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரை அதன் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் சுதந்திர தினமான இன்று அறிமுகப்படுத்தினார்.
ஓலா ஸ்கூட்டர் விலை:-
எஸ் 1 மாடல் விலை 99,999 ரூபாய்
எஸ் 1 ப்ரோ விலை 1,29,999 ரூபாய்
விற்பனை எப்போது:-
அக்டோபர் முதல் விற்பனைக்கு வர உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்கூட்டர் சிறப்பம்சம்:-
ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கி.மீ., வரை செல்லும்
அதிகபட்ச வேகம் 115 கி.மீ
8.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார்
3.9 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி
மொபைல் செயலி மூலம் இயக்கலாம்.
50 சதவிகிதம் சார்ஜ் செய்தாலே 75 கிலோ மீட்டர் வரை இதில் பயணிக்கலாம்
இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவு பெரிய பூட் ஸ்பேசுடன் வடிவமைக்கப்பட்டுள்லது
வீட்டில் முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும்
ஓலாவின் ஹைப்பர் சார்ஜர் நிலையங்களில் 40 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகும்
Tags: தமிழக செய்திகள்