கல்வி உதவித்தொகை பெற உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு:
மத்திய அரசால் பட்டியலிட்ட கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க :-
மேலும் கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை கட்டணமின்றி பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
30.09.2021
கல்வி நிறுவனங்கள், தகுதியான விண்ணப்பங்களை, வரும் 30.11.2021 தேதிக்குள் இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.என அதில், கூறப்பட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/08/2021082663.pdf
இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் உடனடியாக உங்களுடைய கல்லூரியில் விசாரியுங்கள், அல்லது உங்கள் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நல அலுவலகத்தில்,கேட்டு தெரிந்து விண்ணப்பியுங்கள்
Tags: தமிழக செய்திகள்