ரிசர்வ் வங்கி அதிரடி மாஸ்டர் கார்டு டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி தடை..!
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க மாஸ்டர் கார்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்க வேண்டும். ஆனால், மாஸ்டர் கார்டு நிறுவன சர்வரை இந்தியாவில் வைக்கவில்லை.
மாஸ்டர் கார்டு நிறுனத்திற்க்கு பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும், அந்நிறுவனம் விதிமுறையை கடைபிடிக்க தவறிவிட்டது.
இதனால், இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்த அறிவிப்பால், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்