தமிழத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம்
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்துள்ளதால் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்