தமிழகத்தில் மீண்டும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி....
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி தினகரன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி யாக இருந்த சி.விஜயகுமாா்- திருவாரூா் மாவட்ட எஸ்பி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே காவல்துறை ஐஜி சுமித் சரண், சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை டிஐஜி கயல்விழி, காவலர் பயிற்சி மைய டிஐஜி ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா-சென்னை சைபா் குற்றப்பிரிவு-2 எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நில மோசடி தடுப்புப் பிரிவு எஸ்பியாக இருந்த ஜி.ஷியாமளா தேவி-சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாராக பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த என்.தேவராணி-சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்பி யாக பணியட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை அடையாறு துணை ஆணையராக இருந்த விக்ரமன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்
சைபர் பிரிவு கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்