Breaking News

RTE: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அட்மின் மீடியா
0
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்.

இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.

இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.

ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.

ஜூலை 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க:


http://rte.tnschools.gov.in/
                                        https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

குழந்தையின் புகைப்படம்.

குழந்தையின் ஆதார் அட்டை

குழந்தையின் சாதி சான்றிதழ்

தந்தையின் வருமான சான்றிதழ்.

பெற்றோர்களின் ஆதார் அட்டை.

குடும்ப அட்டை


விண்ணப்பிக்க கடைசி நாள்; 03.08.2021

 

மேலும் விவரங்களுக்கு:

 

14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback