FACT CHECK: ஓட்டுநர்களுக்கு 1000 உதவிதொகை என பரப்பபடும் செய்தி உண்மையா? முழு விவரம்..
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓட்டுனர்களுக்கு அறிவிப்பு ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயம்தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத்தொகை ₹1000 வழங்கப்பட இருக்கிறது. அதனை பெற தேவையான ஆவணங்கள். ஆதார் அட்டை - 1 ஜெராக்ஸ்பேங்க் பாஸ்புக் - 1 ஜெராக்ஸ்ஸ்மார்ட் கார்டு - 1 ஜெராக்ஸ்ஓட்டுனர் உரிமம் - 1 ஜெராக்ஸ் இந்த ஆவணங்கள் அனைத்தையும் உங்கள் அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ₹1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது... இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது அனைத்து வாகன ஓட்டுனர்கள் சென்றடையும் வரை பகிருங்கள்... என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த ஆண்டு தமிழக அரசின் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் நல வாரிய உறுப்பினர்களுக்கு கொரானா நிவாராண நிதி உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. அந்த நலவாரியத்தில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் உள்ளார்கள் அதில் ஓட்டுநர்களும் அடங்கும்
அந்த நலவாரிய உறுப்பினர்கலுக்கு தமிழக அரசு அளித்த செய்தியினை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
மேலும் கடந்த ஆண்டு தொழிலாளர் அனைவரும் முறையாக தமிழகத்திலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆணையரிடம் முறையாக பதிவு செய்யப்பட்ட வேண்டும். தற்போது ஆன்லைனிலும் பதிவு செய்யலாம்
ஆனால் சமூக வலைதளங்களில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் ₹1000 நிவாரணத்தொகை செலுத்தப்படும் என பொய்யாக பரப்பிவருகின்றார்கள்