Breaking News

பெண்கள் தங்கள் புகைபடத்தை Facebook, Instagram, what's up போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும். கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வேண்டுகோள்

அட்மின் மீடியா
0
பெண்கள் தங்கள் புகைபடத்தை Facebook, Instagram, what's up போன்ற சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும். கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வேண்டுகோள்



இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..

1. ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி உங்களிடம் முன் பணம் செலுத்தவேண்டும் என்று யாராவது உங்களை தொடர்புகொண்டால் உடனே அந்த அழைப்பைத் துண்டித்துவிடவும்,

2. பெண்கள் தங்களது புகைப்படத்தை FACEBOOK,INSTAGRAM, WHATSAPP வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும்,

3. ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் உங்களை தொடர்புகொண்டு ATM CARD NUMBER, OTP NUMBEER, BANK ACCOUNT NUMBER, PAN CARD NUMBER இதுபோன்று பணபரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் ஏதேனும் கேட்டால் உடனே அந்த அழைப்பை துண்டித்துவிடவும்.

4. ஏதேனும் நிறுவனம் என்ற பெயரில் whatsapp மூலம் வர்த்தகர் என்று அறிமுகமாகி உங்களை தொடர்புகொண்டு உங்கள் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி மர்ம நபர்கள் உங்களை தவறாக பயன்படுத்தக்கூடும்.

5. உங்களுடைய கைபேசிக்கு வரும் தவறான குறுஞ்செய்திகளை நம்பி, LINK யை தொடுவதை முற்றிலும் தவிர்க்கவும்,

6. வங்கிக்கடன் தருவதாக, வங்கி கிளை மேலாளர் போல் தொலைபேசி அல்லது வேறுஏதேனும் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்புகொண்டு, உங்களின் வங்கி கணக்கு பற்றிய விபரங்களை கேட்டால் தெரிவித்தல் கூடாது.

7. பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டினால் அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்கவும்.

8. தங்களது கைபேசி தொலைந்துவிட்டால் உடனே கைபேசி எண்ணை BLOCK செய்திடவும் இல்லையெனில் உங்கள் எண் தவறாக பயன்படுத்தக்கூடும்.

9. கொரோனாவை பயன்படுத்தி ஆன்லைனில் OXYGEN CYLINDER குறைந்த விலையில் தருவதாக கூறி முன் பணம் செலுத்தவேண்டும் என்று கூறினால் பணம் செலுத்தவேண்டாம். 

10. இதயதுடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கண்டறியும் கருவி என எந்த APPயும்
பதிவிறக்கம் செய்து உங்களின் கைரேகையை பதிவிடுவதால் உங்களை பற்றிய அனைத்து தகவலும் திருடப்படும்.

11. உங்களது உறவினர் மற்றும் நண்பர்கள் whatsapp & facebook messageமூலம் உங்களை தொடர்புகொண்டு அவசரத்தேவை என்று கூறி பணம் கேட்டால் உடனே போன் மூலம் அவரை தொடர்புகொண்டு உறுதி செய்த பின் பணம் செலுத்தவும்.

12. ATM CARD மூலம் PETROL BUNK, SHOPPING MALL போன்ற இடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்படவும்.

13. இணையத்தில் பகிரப்பட்டு வரும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் வர்த்தக தள்ளுபடி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.

14. OLX ல் பழைய கார் மற்றும் BIKE தள்ளுபடி விலையில் உள்ளது என்று ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்.

15. உங்கள் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க அல்லது காற்றாலை டவர் அமைக்க உள்ளோம். உங்களுக்கு மாதம் மாதம் பல ஆயிரம் வாடகை கிடைக்கும் என்றும், அதற்கு முன் பல இலட்சங்கள் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினால் நம்ப வேண்டாம்.

16. பொது இடத்தில் உங்களது வங்கி பற்றிய தகவல் மற்றும் இரகசிய எண்களை பகிர்ந்து கொள்ளுதல் கூடாது

17. ATM ல் பணம் எடுக்கும் போது யாராவது உங்களுக்கு தானாக வந்து உதவி செய்வதாக கூறினால் மறுத்துவிடவும், உதவி செய்வது போல் நடித்து உங்களுக்கு தெரியாமல் PIN NUMBER மற்றும் ATM NUMBER யை தெரிந்து கொண்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்துவிடுவார்கள்."

18. அறிமுகம் இல்லாத நபரிடம் இணையத்தில் வீடியோ CALL பேசுவதை தவிர்க்கவும், ஏனெனில் வீடியோ CALL பேசும் போது SCREENSHOT, வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்ட நேரிடும். SCREENRECORDER எடுத்து

19. உங்கள் குழந்தைகள் விளையாடுயாடுகிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்கவும், ஆன்லைனில் பணம் செலுத்தி ஆன்லைனில்  GAME விளையாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

20. பயன்படுத்தப்படாத பழைய வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும். ஏனெனில் உங்கள் வங்கி கணக்கை வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தக்கூடும்.

மேற்கண்ட தவறுகள் நடப்பது தங்களுக்கு தெரிய வரும் பட்சத்தில் தாங்கள் புகார் அளிக்க வேண்டிய இணையதள முகவரி www.cybercrime.gov.in

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback