ஹா ஹா' எமோஜி பயன்படுத்துவது ஹராம் இஸ்லாமியர்கள் இதை செய்யக்கூடாது முப்தி அஹ்மதுல்லா பத்வா
தற்போது வாட்ஸப், பேஸ்புக், யூ டியூப் என சமூகவலைதளங்களில் பலரும் சோகம், கோவம், காதல், சிரிப்பு, கருணை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக பலரும் அதனை பயன்படுத்துகின்றனர்
இந்நிலையில் ஹா ஹா' எமோஜி பயன்படுத்துவது ஹராம் இஸ்லாமியர்கள் இதை செய்யக்கூடாது வங்கதேசத்தை சேர்ந்த முப்தி அஹ்மதுல்லா பத்வா அளித்துள்ளார்
ஒருவர் வேடிக்கையாக தெரிவிக்கும் கருத்திற்கு, வேடிக்கையை குறிக்கும் எமோஜியை பயன்படுத்துவது தவறல்ல.ஆனால், ஒருவரின் கருத்தை கிண்டல் செய்யும் நோக்கில், 'ஹாஹா' எமோஜிக்கள் பயன்படுத்துவது, இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானது. அதனை போஸ்ட் செய்த நபர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டால் பிரச்னையில்லை ஆனால் ஹா ஹா எமோஜியை பயன்படுத்தி பிறரை கேலி, கிண்டல் செய்வதாக இருந்தால், இஸ்லாமை பொறுத்தவையில் இது பாவம் இஸ்லாமின் புனித புத்தகத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பிறரை கேலி, கிண்டல் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது என்றார்.
தற்போது பேஸ்புக்கில் ஒருவரை கேலி செய்ய இது போன்ற எமோஜிக்கள் பகிரப்படுகின்றன. இனி சமூக ஊடகங்களில் என்னை பின்தொடர்வோர், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். எமோஜி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=lKT7cmFeUrg
Tags: மார்க்க செய்தி