Breaking News

கோவை நஞ்சுண்டாபுரம் குறித்த வதந்தியை நம்பவேண்டாம் : மாவட்ட சுகாதாரத் துறை விளக்கம்!!

அட்மின் மீடியா
0

கோவை நஞ்சுண்டபுரத்தில் உருமாறிய கொரோனா பரவலால் பலர் உயிரிழந்து விட்டதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனறும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 


கோவை நஞ்சுண்டாபுரத்தில் அதிகளவில் உருமாறிய கொரோனா பரவி உள்ளதாகவும், அதனால் மக்கள் பலர் உயிரிழந்து உள்ளதாகவும் சில விஷமிகள் பொய்யான தகவலை பரப்பி வருவதாக மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நஞ்சுண்டாபுரத்தில் நோய் தாக்கத்தை கண்டறிய தற்போதுவரை 650 மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதன்படி கடந்த 10 நாட்களில் 56 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செயயப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், நோய் தொற்று பரவல் உள்ள பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளதா? என விசாரணை செய்து வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் பாதிப்பு இருப்போரை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் இதுபோன்ற பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், பொய்யான தகவல்களை பரப்பிய விஷமிகள் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

TAGS: கோவை நஞ்சுண்டாபுரம்  நஞ்சுண்டாபுரம்  kovai nanjundapuram



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback