Breaking News

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவை துவக்கம்..!! எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்ததால் இந்திய விமானங்களுக்கு துபாய் அரசு தடை விதித்திருந்தது. 
 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் இந்தியா மற்றும் துபாய் இடையேயான விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
 
ஜூன் 23 முதல் இந்தியா தென்னாப்பிரிக்கா நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.  
 
 
  • மேலும் துபாய்க்கு வரும் பயணிகள் கண்டிப்பாக கொரானா  தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி இருக்கவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் 

 

  • அனைத்து பயணிகளும் துபாய் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட QR குறியிடப்பட்ட கொரானா நெகட்டிவ் சான்றிதழ் முடிவை வைத்திருக்க வேண்டும்.


  • இந்தியாவிலிருந்து துபாய் வரும் அனைத்து பயணிகளும் துபாய் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இங்கு மீண்டும் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். 
 
 
சுமார் 2 மாதங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் துபாய் இடையே மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback