Breaking News

FACT CHECK: வாட்ஸ் ஆப் கால்களை மத்திய அரசு ரெக்கார்ட் செய்கிறதா? வாட்ஸ் அப்பில் வலம் வரும் வதந்தி

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உங்கள் வாட்ஸ் ஆப் கால்களை மத்திய அரசு ரெக்கார்ட் செய்கின்றது மேலும் நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் படிக்கிறது  அதோடு மட்டுமல்ல மத்திய அரசு உங்கள் மெசேஜை படித்தால் அதில் மூன்று டிக் இருக்கும். அதோடு இரண்டு ப்ளூ டிக், ஒரு ரெட் டிக் இருந்தால் அரசு உங்கள் மெசேஜை குறிப்பெடுத்துக்கொண்டது, மூன்று ரெட் டிக் இருந்தால் உங்கள் மெசேஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இணையத்தில் கடந்த 3 வருடங்களாக அடிக்கடி இந்த செய்தி பலராலும் அவ்வபோது ஷேர் செய்யபடுகின்றது

இப்படி உலவி வரும் இந்த செய்தி முழுவதும் பொய்யானது யாரும் நம்பவேண்டாம்

மத்திய அரசோ, மாநில அரசோ, ஏன் வாட்ஸப் நிறுவனம் கூட உங்களின் மெசேஜ்களை படிப்பதும் இல்லை, கால்களை ரெக்கார்ட் செய்வதும் இல்லை. 

வாட்ஸ் ஆப்பில் நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் எண்ட் - டூ எண்ட் என்கிரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்களை நம்மையும், மெசேஜை பெறுபவரையும் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this