Breaking News

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது சுகாதார துறை

அட்மின் மீடியா
0
தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்தது சுகாதார துறை.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: 

கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல சாதாரண ஆம்புலன்ஸ்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆக்ஸிஜன் உள்ளிட்ட அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு 2 ஆயிரம் ரூபாய் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.50 ஆகவும், 

வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆமபுலன்ஸ்களுக்கு முதல் 10 கி.மீ.,க்கு ரூ.4 ஆயிரம் ஆகவும், பிறகு ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.100 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback