ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. தாயும் சேயும் நலம்
மேற்கு ஆப்பிரிக்கா நாடானா மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார்.
மருத்துவமனையில் முதலில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர்.
மேலும், சிஸ்ஸுக்கு சிறப்பு கவனிப்பு தேவை எனக் கூறி மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்த சிஸ்ஸினுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன.
அந்தப் பெண்ணுக்கு மொராக்கோவிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்தன.
தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags: வைரல் வீடியோ