Breaking News

2 அதிமுக எம்பிக்கள் ராஜினாமா!! கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் 2 பேரும் எம்.பி. பதவியை ராஜினாமா

அட்மின் மீடியா
0

முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்தனர்



தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும் வெற்றி பெற்றனர். 

தற்போது ஏதேனும் ஒரு பதவியில் தான் இருக்க முடியும் என்பதால் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் இருவருக்கும் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும்  மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback