Breaking News

FACT CHECK: கும்பமேளா பற்றி பேசிய பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா நடு ரோட்டில் கொலை என பரவும் செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பிரக்யா மிஸ்ரா பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார் ஏனென்றால் அவள் கும்பமேளாவில் கொரானா வைரஸ் பரவுகின்றது   பற்றி செய்திகளில் பேசிக் கொண்டிருந்தாள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியும் அதில் உள்ள புகைப்படமும் அந்த வீடியோவில் உள்ள சம்பவமும் வேறு வேறு ஆகும்

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில்  நடு ரோட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யும் அந்த பெண்ணும் கும்பமேளா பற்றி பேசும் பெண்ணும் வேறு வேறு ஆகும்

கும்பமேளா பற்றியும் கும்பமேளாவில் கொரானா பரவுகின்றது என பேசும் பெண் பிரபல இணையதள செய்தியாளர் பிரக்யா மிஸ்ரா ஆவார் 

ஆனால் நடு ரோட்டில் கொலை செய்யபட்டு கிடக்கும் பெண் பெயர் நீலு மேத்தா ஆவார், 26 வயதாகும் அவர் டெல்லியில் உள்ள சபர்ஜங் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார்.

கடந்த 10.04.2021 அன்று டெல்லியில் உள்ள ரோகிணி மார்க்கெட்டில் அவரை அவளது கணவர் ஹரிஷ் மேத்தா என்பவர் தனக்கு துரோகம் செய்து விட்டாள் என்பதற்க்காக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்


ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் அது பிரபல பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ரா என்று பரப்பி வருகின்றார்கள்

இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் தான் நலமுடன் உள்ளதாகவும் அந்த செய்தி பொய்யான செய்தி என்று பிரக்யா மிஸ்ரா  அவர்கள் பதிவிட்டுள்ளார்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=REVIlzJPCY4


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback