அமீரகத்தில் பயணிகள் அதிகபட்சமாக Dh3,000 மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம்…மத்திய சுங்க ஆணையம் அறிவிப்பு !
அமீரகத்திலிருந்து புறப்படும் பயணிகள் அதிகபட்சமாக 3,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்று மத்திய சுங்க ஆணையம் தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் நுழையும்போது பயணிகள் எடுத்துச் செல்லக்கூடிய பரிசுகளின் மதிப்பு 3,000 திர்ஹம்ஸுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
200 சிகரெட்டுகளின் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருத்தல் கூடாது.
புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை 18 வயதுக்கு குறைவான பயணிகள் கொண்டு செல்லக்கூடாது
பயணத்தின் போது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள்…
ரேடியோ மற்றும் சிடி பிளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், டிவி மற்றும் ரிசீவர் தனிப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், சிறிய கணினிகள், பிரின்டர்ஸ் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள்
பயணத்தின் போது எடுத்துச்செல்ல தடைசெய்யப்பட்ட பொருட்கள்…
போதைப்பொருள், சூதாட்ட கருவிகள் மற்றும் இயந்திரங்கள், நைலான் மீன்பிடி வலைகள், உயிருள்ள பன்றி இன விலங்குகள், தந்தங்கள், சிவப்பு விளக்கு தொகுப்பு கொண்ட லேசர் பேனாக்கள், போலி மற்றும் கள்ள நாணயம், வெற்றிலை உள்ளிட்ட பான் பொருட்கள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள்,
Tags: வெளிநாட்டு செய்திகள்