கொரானாவின் தற்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும். மோடி உரை முழு விவரம்....
நாட்டு மக்களிடையே இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்
அதில்
தற்போது கரொனா இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது
கரோனாவின் தற்போதைய பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன்.
கரோனா பேரிடரில் தங்களது உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் மேலும் மக்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த சூழலில் நாம் அனைவரும் முன்களப் பணியாளர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். நம்முடைய பொறுமையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏதுவாக தடுப்பூசி உற்பத்தியை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.
தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும்.
தடுப்பூசி பணியில் தனியார் பங்கும் முக்கிய அங்கம் வகிக்கும்.
தடுப்பூசி தேவையான அனுமதியை மத்திய அரசு குறித்த நேரத்தில் வழங்கும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது; ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்
மருந்து உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.
Tags: இந்திய செய்திகள்