Breaking News

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என வாட்ஸப்பில் சுற்றும் போலியான பார்வேர்டு மெசேஜுகளை நம்ப வேண்டாம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வரும் 9 ம்தேதி முதல் புதிய ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாகவும், அதன் கட்டுப்பாடுகள் என்றும் போலியான தகவல் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

 


அதில் ஏப்ரல் 9 தொடங்கி 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்போவதாகவும், அப்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்றும் ஒரு பட்டியலை  பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றார்கள்

 

ஆனால் தமிழக அரசு சார்பில் அவ்வாறாக எந்த அறிவிப்போ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை 'தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் வதந்தியே! அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்' என கூறியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback