Breaking News

திட்டமிட்டபடி மே 2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2-ம் தேதி நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாக்கு எண்ணிக்கையின்போது இன்னும் கடுமையான ஏற்பாடுகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து வெற்றி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வரும்போது அவருடன் 2 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this