Breaking News

சென்னை மக்களே தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

சென்னை மக்களே தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்



சென்னை மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்ட தகுதியுடைய சென்னை மாவட்டத்திற்குட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

அலுவலக உதவியாளர் (Office Assistant)

கல்வி தகுதி:-

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

 18 முதல் 34 வயது வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி :-

18.09.2026, மாலை 5.45 மணி வரை

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.09.2026 மாலை 5.45 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலமாக மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி

மண்டல புள்ளி இயல் இணை இயக்குநர், மண்டல புள்ளி இயல் அலுவலகம், பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை, பழைய கட்டிடம், தரைத்தளம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை சென்னை-600 006

குறிப்பு

1. விண்ணப்பங்களுடன் கல்வி தகுதி, சாதிச்சான்று இருப்பிடச்சான்று நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

2. அரசு விதிகளின் படி இனசுழற்சி முறை பின்பற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

3. தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2026/09/17884179192756.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback