Breaking News

சமூக வலைதளங்களுக்கும் OTT தளங்களுக்கும் புதிய கட்டுபாட்டை விதித்த மத்திய அரசு! என்ன என்ன கட்டுபாடு!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய, அமைதியை குலைக்கக்கூடிய பதிவுகள் இடப்படுவது குறித்து பல நாட்களாக பலர் புகார் அளித்து வந்த நிலையில் மத்திய அரசு இன்று அதற்கான கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிவித்துள்ளது. அவை, 

  • அவதூறு, ஆபாசம், இனவெறி, சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நட்பு நாடுகளுடனான உறவு தொடர்பான கருத்துகளை தடை செய்ய வேண்டும்
  • இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி, ஃபேஸ்புக் 41 கோடி, இன்ஸ்டாகிராம் 21 கோடி, ட்விட்டர் 1.75 கோடி ஆக உள்ளது. 
  • ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒரு முறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்மந்தமான விரிவான தகவல் வழங்க வேண்டும் 
  •  பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் புகார்களை பெறவும்,விசாரணை நடத்தவும் தனி அதிகாரி ஒருவரை சமூக வலைதளங்கள் நியமிக்க வேண்டும்
  • தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்ற விஷயத்தை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • அரசு நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைத்தளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும் 
  • ஒருவரின் கணக்கை நீக்கினால் அதுகுறித்த விவரத்தை சம்மந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
  •  விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால், அதற்கென்று சில வரைமுறைகளும் உள்ளது. ஓடிடி தளங்கள் 13+, 16+, வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.

 

மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700766

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback