Breaking News

FACT CHECK செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் இந்து உப்பு? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து! நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும். இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள்.என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


இந்து உப்பு என்றால் என்ன?

இந்து உப்பு என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு ஆகும்

இவ்வகை உப்பு இந்தியாவில் இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது 

இந்து உப்பு  பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.


இந்து உப்பின் சத்துக்கள்

சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் 

சோடியம் குளோரைடுடன் (95-98%) 

பொட்டாசியம், 

கால்சியம், 

மக்னீசியம், 

சல்பர், 

புளோரைடு, 

அயோடின் கனிமங்களும் 

மற்றும் சில கனிமங்களும் (2-4%) கொண்டுள்ளது (2-4%).[2], போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீரிலும், இளநீரிலும் ஊற வைத்த பின்னரே இயற்கையாக விற்பனைக்கு வருகிறது.


இந்துப்பு செயலிழந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரிசெய்யுமா ? உண்மை என்ன?

இந்துப்புக்கு பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை

ஆனால் இந்துப்பு பயன்படுத்துவதால் செயலழிந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரி செய்து பழைய நிலைக்குத் திரும்பி புத்துயிர் பெரும் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.vikatan.com/health/food/know-everything-about-rock-salt-aka-induppu


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback