Breaking News

ஜனவரி 30ம் தேதிக்குள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். 



வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட மானியம்:

இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும்.ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும்.


யார் விண்ணப்பிக்கலாம்:

இந்த அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 


வயது தகுதி:

இரு சக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு குறைந்தபட்ச வயது 18 ஆண்டுமுதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.


ஆண்டு வருமானம்:


இந்த திட்டம் மூலமாக வாகனம் பெற அந்த பெண்ணிற்கு ஆண்டு வருமானமானது ரூ. 2.5 லட்சத்திற்கு கீழே இருக்க வேண்டும். 

வேலையில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

வாகன ரகம்:

அடுத்து இந்த திட்டத்தில் வாகனம் ஒன்றை தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த வாகனத்தின் இன்ஜின் 125cc (Engine Capacity) அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மேல் வாகனம் எடுப்பவர்களுக்கு வாகனத்தின் மானியம் கிடைக்காது.

தேவையான ஆவணம்:

வருமான சான்றிதழ், 

சாதி சான்றிதழ், 

ஆதார் கார்டு,

8 ஆம் வகுப்பு கல்வி சான்றிதழ், 

வங்கி பாஸ் புக்

ஓட்டுநர் உரிமம் 

வேலையில் பணிபுரிந்தால் அதற்கான சான்றிதல்

அடுத்து வாகனம் எடுக்கும் முன் வாகனத்திற்கான Quotation கொடுப்பார்கள். அந்த வண்டியின் Quotation-ஐ அம்மா இருசக்கர வாகனத்தின் விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? 

மாநகராட்சிகளில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த மண்ட அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், வருமானம் உள்ளிட்ட சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். 


மாநகராட்சி தவிர  ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ளவர்கள் 

இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியுடையோர் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில்  விண்ணப்பிக்க்லாம்

உங்கள் பகுதியில்  என்று கடைசிநாள் என்று தெரிந்து கொண்டு உடனே   விண்னப்பியுங்கள்

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிக்கை

https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/01/2021011291.pdf


அம்மா இரு சக்கர விண்ணப்ப படிவம் 

http://www.tamilnadumahalir.org/tnatws.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback