சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்த குவைத்
அட்மின் மீடியா
0
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வரும் வேளையில், குவைத் அரசும் பிரிட்டன் உடனான நேரடி விமானப் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்துள்ளது
இந்நிலையில், சவூதி அரேபியா மற்றும் ஓமான் போன்ற வளைகுடா நாடுகள் ஒரு வாரத்திற்கு சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மூடுவதாக தற்பொழுது அறிவித்துள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்பொழுது குவைத் அரசும் தனது எல்லைகளை மூடி, அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்திற்கும் இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்