டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் அவசியம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்படும் அரசு தேர்வுகளுக்கு பல விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் தற்போது ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக, ஒரு முறை ஆதார் எண்ணை சோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறை பதிவு அல்லது நிரந்தர பதிவு (One Time Registration) வைத்திருக்க அனுமதி இல்லை.நிரந்தர பதிவில் இணைத்துள்ள ஆதார் எண்களை ஒரு முறை மட்டுமே மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் குரூப் 1 தேர்வு மற்றும் உதவி இயக்குனர் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு தேர்வு கூட நுழைவுச்சீட்டு பெற ஆதார் எண் அவசியம் ஆகும்
Tags: முக்கிய அறிவிப்பு