காலாவதியான விசாக்களுக்கு டிசம்பர் வரையிலும் அபராதம் கிடையாது..!!பொது மன்னிப்பை இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டித்த அமீரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 க்கு முன் காலாவதியான விசாக்களை வைத்திருந்தும் அமீரகத்தை விட்டு வெளியேறாமல் இருக்கும் நபர்களுக்கு கடந்த மே மாதத்தில் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டு அவர்கள் எந்த வித அபராதமும் செலுத்தாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பலாம் என்று அறிவித்திருந்தது.
இந்த பொது மன்னிப்பானது இன்று (நவம்பர் 17) வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற இந்த ஆண்டு இறுதி வரையிலும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசாக்களை வைத்திருந்து தற்பொழுது அமீரகத்தில் இருப்பவர்கள், டிசம்பர் இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முடிந்தால் அவர்களின் அபராதம் தள்ளுபடி செய்யப்படும்
Tags: வெளிநாட்டு செய்திகள்