பீகார் தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது!
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,
ஏஐஎம்ஐஎம் கட்சி
பகுஜன்சமாஜ்,
ராஷ்ட்ரிய லோக் சமதா
ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மொத்தம் 24 தொகுதிகளில் இக்கூட்டணி தங்கள்வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
இதில், ஏஐஎம்ஐஎம் 14 தொகுதிகளில் போட்டியிட்டது இதில் 5 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் வெற்றி பெற்றிருக்கிறது.
வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஒவைசி
ஏராளமான வாக்குகளை அளித்து பிகார் மக்கள் எங்களை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள் பிகாரில் கட்சியை வலுப்படுத்துவோம் என்றும்,தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உழைப்போம் என்றும் தெரிவித்தார்.
#WATCH: Celebrations outside Asaduddin Owaisi's residence in Hyderabad, Telangana; his party All India Majlis-e-Ittehadul Muslimeen has won one seat in #Bihar and is leading on four seats, as per latest Election Commission of India trends. pic.twitter.com/QAaEuaNm8H
— ANI (@ANI) November 10, 2020
Tags: இந்திய செய்திகள்