Breaking News

FACT CHECK குளிர் பானத்தில் விஷம் கலந்துள்ளார்கள் என பரவும் வதந்தி செய்தி: உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு வீடியோ ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஒரு பெண் தன் மடியில் குழந்தையை வைத்து கதறுவதை போல் உள்ளது அந்த வீடியோ மேலும் அந்த வீடியோவின் பின்னணியில் புதிதாக  தீவிரவாதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்துள்ளார்கள் யாரும் கூல்டிரிங்கிஸ் குடிக்காதீர்கள் என கூறப்பட்டுள்ளது அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோவில் உள்ளது போல் எந்த சம்பவமும் இதுவரை நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை

மேலும் அந்த விடியோவில் உள்ள பெண்மணி தன் கணவ்ருடன் ஏற்பட்டதகறாறு காரணமாக அவர் அடித்த வீடியோவினை  பாதியில் எடிட் செய்து அது போல் பிண்ணனி பேசி வதந்தி கிளப்பியுள்ளார்கள் அதன் முழு வீடியோ கீழே உள்ளது

மேலும் அந்த வீடியோ ஆந்திராவில் உள்ள தெலுங்கானாவில் கடந்த 2018 ம் ஆண்டு நடந்த  சம்பவம் ஆகும் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback