Breaking News

5 நிமிடத்தில் ஆன்லைனில் வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
1
உங்கள் வாக்காளர் அட்டையில் உங்கள் விவரங்கள் தவறாக உள்ளதா


18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும், விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்வது மிகவும் எளியது ஆகும்

பெயர்

பிறந்த தேதி ,மாதம், வருடம்

தந்தை பெயர்

முகவரி

போட்டோ

ஆகியன தவறாக இருந்தால் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வந்துவிட்டது புதிய ஆப்

ஆப் இன்ஸ்டால் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen


முதலில் தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ ஆப் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் மொபைல் எண் கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்களுக்கு என்ன சேவை தேவைப்படுகிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். 

அடுத்து சரியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். அதனை குறித்து வைத்து கொள்ளுங்கள், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு:-

https://www.youtube.com/watch?v=3aqXEGKqMnU

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. காணாமல் போன வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி

    ReplyDelete