Breaking News

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 





அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கலாம் என அறிவித்திருந்தது

இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு அதில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.அதில்,



கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படக் கூடாது

இரவு 8 மணி வரை கோயில்களை திறந்து வைத்து பக்தர்களை அனுமதிக்கலாம்

தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது

கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும்


கோவிலுக்குள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்

65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்

நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.


பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும்

தரிசனத்திற்காகவும், தரிசன டிக்கெட்களை பெறுவதற்காக வரிசையில் நிற்கும் போது 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும்

கோவில் வளாகத்தில் எச்சில் துப்பக்கூடாது

காலணிகளை நுழைவு வாயில்களில் அவரவே எடுத்து வைத்துவிட்டு செல்ல வேண்டும்

பக்தர்கள் வரிசையில் நிற்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு வட்டமிட வேண்டும்,

உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும்

சாமி சிலைகளை தொட பக்தர்களுக்கு அனுமதியில்லை

கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

பஜனை குழு, பக்தி இசைக்குழுக்களை அனுமதிக்க கூடாது

விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்க கூடாது

வழிபாட்டு தலங்களின் தரைப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

கோவிலுக்குள்ளும், சன்னிதானங்களிலும் குறிப்பிட்ட அளவான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.



தேங்காய், பூ, பழம் போன்றவற்றை அளிக்க அனுமதியில்லை.

கோவில் குளங்களில் பொதுமக்கள் நுழைய தடை விதிப்பு


கோவில் வளாகத்தில் பிரசாதம் உண்ண அனுமதி இல்லை

கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறும் போது அதில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்
 
என நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback