Breaking News

FACT CHECK: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கெஜ்ரிவால் திட்டம்? உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டெல்லியில் கெஜ்ரிவால் அரசு ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டும் அரசு வேலை என்கிற புதிய திட்டத்தைக் கொண்டு வரபோவதாகவும் அதன்படி கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும் இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும் .என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


நாம் தேடிய வரையில் இது போல் ஒரு திட்டம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  எந்த வித அறிவிப்பும் அறிவிக்கவில்லை

இது போல் ஒரு திட்டம் பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் கட்சி ஆம் ஆத்மியும் அறிவிக்கவில்லை

இது போல் ஒரு செய்தியினை எந்தவித ஊடகமும் இதுவரை வெளியிடவில்லை

எனவே இது ஒரு பொய்யான செய்தியாகும்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

#one family one govt job kejriwal

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback