Breaking News

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து முதலமைச்சர் உத்தரவு!

அட்மின் மீடியா
1
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கு, இந்த பருவத்துக்கான தேர்வு மட்டும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், தற்போதுள்ள சூழலில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகளில் தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில், இளங்கலை முதலாம், 2ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும், பலவகை தொழில் நுட்பப் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். 


முதுகலைப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், இளநிலை பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பருவத்தேர்வில் விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், எம்.சி.ஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கான தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மாணவர்களின் நலன் கருதி யுஜிசி மற்றும் AICTE வழிகாட்டுதலின்படி, மதிப்பெண் வழங்கி அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. அரியர் மாணவர்களுக்கு நிலைமை என்ன

    ReplyDelete