ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம்....
அட்மின் மீடியா
0
ஆன்லைன் ரம்மி விளையாடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்துவதால் தற்போது இளைஞர்கள் பலர் அதனை விளையாடத் தொடங்கியுள்ளனர். ஆனால், இதனால் பணத்தை இழப்பவர்கள் குறித்து யாரும் பேசுவதில்லை, இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில
அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் சேர்ந்த சிலுவை என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில் கொரோனா ஊரடங்கு ஒரு காலத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நானும் என் நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். என் மீதும் என் நண்பர்கள் மீது கூடங்குளம் போலிஸார் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர்.பொது இடத்தில் நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் குற்றம் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அவர்கள் , பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட இலவசமாக அனுமதிக்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்தது போன்று ஆன்லைன் மூலம் விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் பணத்தை மையமாக கொண்டு ரம்மி உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. எனவே மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி இவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். இளைஞர்கள் நேரத்தையும் சிந்திக்கும் திறனையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு சீரழிக்கிறது என்றும், படித்த பட்டதாரி இளைஞர்களின் பணமும் இந்த விளையாட்டில் பறிபோவதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
tag: online rummy games ban court advice
Tags: தமிழக செய்திகள்