Breaking News

FACT CHECK: சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு: திருக்குரானில் கூறிய ஆத் சமூகத்தினரின் உடல்கள் என்ற செய்தி உணமையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்... திருக்குரானில்அறிவித்த அல்லாவால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது. மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும் பெரிய உடலும் கொண்டவர்கள் அல்லாவின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் எனகுரானில் அறிவிக்கப்பட்டது திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று  மாஷா அல்லாஹ் அல்லாஹ் அக்பர் என்று ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும்  ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

நாம் இந்த செய்தியில் குரான் கூறிய சம்பவங்களை மறுக்கவில்லை .ஆனால் அத்ற்க்காக இட்டுகட்டப்படும் இந்த புகைபடத்தைதான் நாம் மறுக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

அதில் சவூதி அரேபியாவில். கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்... என்பது  பொய்யானது ஆகும்

அந்த புகைபடம் ஒரு கணிணி போட்டோஷாப்பில் உருவாக்கபட்டது ஆகும்

ஒரு அமெரிக்க கணிணி வடிவமைப்பாளர் இந்த ஃபோட்டோஷாப்பை கடந்த 14.08.2011 அன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற  டிசைன் கிரவுட்   என்று நடைபெற்ற போட்டிக்காக உருவாக்கிய போட்டோஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைபடம் அது 

அட்மின் மீடியா ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback