Breaking News

BREAKING NEWS: ரேஷன் பொருட்கள் இலவசமாக , நவம்பர் மாதம் இறுதி வரை வழங்கப்படும் - பிரதமர் மோடி உரையின் முழு விவரம்

அட்மின் மீடியா
1
ஜீலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அவர்களின் இன்றைய உரையின் சிறப்பம்சம்


  • கொரானாவிற்க்காக மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

  • இரண்டாம் கட்ட தளர்வுக்குள் தேசம் நுழைந்துள்ளது.

  • கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது

  • இந்த இரண்டாம்கட்ட தளர்வில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதிக கவனமுடன் இருக்க வேண்டிய நேரம் இது. 

  • நண்பர்களே, யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான் பொது முடக்கத்தின் போது உச்சக்கட்ட முன்னுரிமையாக இருந்தது. யாரும் பசியுடன் படுக்கைக்கு போகக் கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், குடிமை சமூகம் ஆகியவை தங்களால் முடிந்தவற்றை செய்தன.

  • பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் இலவச உணவு பொருள்களை வழங்கும் இந்த திட்டம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது. 80 கோடி ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு அரசு இலவச உணவு பொருள்களை வழங்க உள்ளது.குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

  • சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட முழு ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

  • கொரோனா தடுப்பு பணியில் சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

  • விவசாயிகளுக்கும் , வரி செலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • மேலும் நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென்றும், 3 அடி தூர சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நான் மீண்டும் ஒரு முறை உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன், உங்களிடம் மன்றாடுகிறேன்.தயவுசெய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த கோரிக்கையோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.'இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. Sir we can't do anything without money... OK u r giving rice,dhal, sugar. How can v pay for electricity, gas, milk for children's an other grocery.... Richer gets richer an v r poor difficult to survive..

    ReplyDelete