Breaking News

முடி வெட்டணும்னா ஆதார் கொண்டு போகணும் - அரசு புதிய உத்தரவு!

அட்மின் மீடியா
1
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.


இதனால் மார்ச் முதல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சலூன்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.



அதன்படி, சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் ஆதார் போன்ற அடையாள விவரங்களை ஒரு பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும்.ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேலங்கி, துண்டு என ஒரு கஸ்டமருக்கு பயன்படுத்தும் பொருட்களை சலவை செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும்

வாடிக்கையாளரது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சலூன் கடைகள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்து கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்


காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் இருக்கும் போது அழகு மற்றும் பிற சேவைகளுக்கு அழகு நிலையம், ஸ்பாக்களுக்கு வாடிக்கையாளர்கள் வரக்கூடாது.

அத்தகயை வாடிக்கையாளர்களை அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விபரத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு அழக நிலையம், ஸ்பாக்களிலும் மேற்கசொன்ன அறிவிப்புடன் கூடிய காட்சிப் பலகை வைக்கப்பட வேண்டும்

ஆகிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. இதில் எந்த அளவுக்கு நமது விபரங்கள் பாதுகாக்கப்படும் இது பாதுகாப்பான நடைமுறையா?

    ReplyDelete