Breaking News

கொரானாவினால் இறந்தவரின் உடலை காட்டில் வீசி சென்றார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கொரோனா நோயால் உயிரிழந்தவரின் உடலை திருச்சி SRM மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றி வந்து சமயபுரம் அருகே கோட்டமெடு பகுதியின் ஒதுக்குப்புறமான இடத்தில் தகுந்த பாதுகாப்பு முறையில்லாமல் வீசிவிட்டு செல்லும் வீடியோ.



என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த வீடியோவில் முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டுமே வைத்து எடிட் செய்து வெளியிட்டு உள்ளனர்

திருச்சி மாவட்டம் இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில், பெண்ணாடத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், மூச்சுத் திணறல் மற்றும் கடுமையான தொண்டை வலி பிரச்னையால், கடந்த 15-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  சிகிச்சை செய்துகொண்டிருக்கும்போதே அவரது மகன்களிடம் தெளிவாக எடுத்துச் சொன்னோம். இவரை பிழைக்கவைப்பது கடினம். முயற்சிசெய்யலாமா என்று கேட்டதற்கு, அவர்களும் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

சிகிச்சை பலனின்றி, அன்று மதியம் 2 மணியளவில் இறந்திருக்கிறார். இந்நிலையில், அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் தங்களுடைய ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று கோட்டைமேடு என்கிற பகுதியில் உள்ள காட்டில் வீசிவிட்டுச் சென்றதாக, ஒரு நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது


இந்நிலையில் என் தந்தையின் உடலை நாங்கள்தான் அடக்கம் செய்தோம். என தந்தையின் இறப்பை கொச்சைப் படுத்தாதீர்கள் என்று அவரது மகன்கள் தெரிவித்துள்ளார்கள் 


மேலும் இறந்த உடலை நாங்கள் எடுத்துச்செல்கிறோம் என்றதும், மருத்துவமனை தரப்பினர் இங்கிருந்து அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இங்குதான் புதைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தார்கள். 

அவர்கள் முன்னிலையில்தான் கடந்த 16-ம் தேதி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்கள். கோட்டைமேடு என்ற காட்டுப்பகுதியில், 15 அடி ஆழத்திற்கு ஜே.சி.பி மூலம் குழிதோண்டி, உடலைப் எங்க அப்பாவின் உடலை காட்டுப்பகுதியில் புதைத்தோம். எங்களுடன் அதிகாரிகளும்  ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இருந்தனர். என்று தெரிவித்துள்ளார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK

Give Us Your Feedback