கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்
அட்மின் மீடியா
1
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்
கொரானாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி இன்று 10.06.2020 புதன்கிழமை காலை காலமானார்.
இவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இதனையடுத்து ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜெ. அன்பழகனின் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அவர் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு